Saturday, April 12, 2008

உறவுகள்???

பிரம்மச்சாரி வாழ்க்கைக்குள் நான் பிண்ணப்படும்போதெல்லாம் என்னை இடுகைக்குள் இடம்மாற்றம் செய்வது வழக்கமாகிவிட்டது...

நானுறு நாட்களுக்கு பின் நான் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி...
மூளையை கசக்கி ஏதாவது எழுத நினைத்தால், மூலையில் உறங்கும் மூளையை எழுப்புவது பாவமாக கருதியதால், என்றோ, எங்கேயோ எழுதி கிழித்த என் எண்ண குவியலிலிருந்து சில துளி...

உறவுகள்???

ஊடல் உள்ளபோது

உடம்புக்கு முடியாவிட்டால் கூட

உன்னதமான உறவும்

உறங்கிப்போகும்!!!

______________________________________

இருண்ட இரவில்

இதயம் வெடிக்க

இருமிய போதும்

இம்மியளவுக் கூட

இசையா உறவு

இழுக்க வேண்டுமா?

இழக்க வேண்டுமா?
________________________________

அலை கரைப் பார்த்து செல்கையில்

கடலுக்கு கோபம்?

அலை கடலுக்குள் கரைகையில்

கரைக்கு கோபம்?

கடவுளே!!!

அலைக்கு இது

கறையா?

கடமையா?

_______________________

Thursday, March 01, 2007

பழுது பார்த்த பசலை.. ;)

ஏதோ பொழுதுப்போன வேளையிளே, பொருள் தேட வந்த என்னை, பழுது பார்த்த பசலை, வார்த்தைகளையாய் வளி(லி)யவிட்ட கவிதை? (யாருப்பா அது? நட்பு வட்டாரத்துல, பொய்னு கத்தறது?) சும்மா ஒரு ரவுஸுக்கு... ஏதோ எழுதிட்டோம், இடுகை-யில ஏத்தனுமே, அதுக்கு ஒரு தமாசு முன்னுரை. அவ்வளவுத் தான்... வேற ஒன்னுமில்லீங்...ங்!!!

செல்லமே!!!

முகில் அழகென்றால்
முனகும் மனசு?
உன் கூந்தல் தரிசித்த - நான்
எப்படி ஏற்பேன்?

வட்ட நிலா தாங்கும் வானம் அழகென்றால்
வாடும் மனசு?
என் குங்குமம் தாங்கும் உன் நெற்றி நேசித்த - நான்
எப்படி ஏற்பேன்?

இரு சூரியன் ஒரு இடத்தில் இல்லையென்றால்
இருளாகும் மனசு?
அருகருகே அக்னியாய் உன் கண் கண்ட - நான்
எப்படி ஏற்பேன்?

மனித உறுப்பில் கூர்மை இல்லை! கூவினால்
குறுகுறுக்கும் மனசு?
உன் நாசி உறசி குருதி பார்த்த - நான்
எப்படி ஏற்பேன்?

பூவின் மேல் பனித்துளி பரவசமூட்டும் அழகென்றால்
புழுங்கும் மனசு?
உன் முகத்தின் பருவை பக்கத்தில்ப் பருகிய - நான்
எப்படி ஏற்பேன்?

இருவரிக் கதை கடினமாம் - இல்லையென்று
இருமாப்புக் கொள்ளும் மனசு?
உன் உதடுகள் காட்டிய ஊமைக் கதைகளை உடனிருந் உள்வாங்கிய - நான் எப்படி ஏற்பேன்?

இப்படி என்னை இம்சிக்கும் இன்பமே!!!
இயலாமையில் இயன்றளவு
வார்த்தையில் வழுக்கும்
வாழ்க்கையை வார்த்துள்ளேன்...






தள்ளி நிற்கும் தலைவனின் ஏக்கம்
தரணியில் யாரரிவார்?
ஆண்ணுக்கும் ஆசையுண்டு
ஆண்டவனிடம் அருகிப்பார்

வரியில்லா பட்ஜெட் மக்களுக்கு நன்று - இப்படி
வரிக்குள் வார்த்தை வழி(லி) உணர்ச்சி வாழ்க்கைக்கு நன்று.
உலகத்தின் உச்சந்தலையில் - உன் தலைவன்?
வயிற்றுப் பகுதியில் - என் வசந்தம்?

என்னை சுமந்தவள் - உன்னிடம்
என்னை தந்தாள்
என்னை சுமந்தாய்
என்னை சுமந்தவள் போல இன்று - நீ?

உனக்காக மட்டும் உருகும் உன்னவன் :)

Sunday, February 11, 2007

மொழி

பசிக்கு பால் தேடி பதறும் குழந்தைக்கு, அழுகை ஒரு மொழிங்க.
மதிப்பெண் குறையும்போது, உன் மகன் உருப்பட மாட்டாண்டி, மனைவி நோக்கி உருமல், தந்தையின் மொழிங்க.
அவசரத்துக்கு கடைக்கு போய்ட்டு வரச்சொன்ன தாயிடம் சாவகாசமாய் போய் வாங்கி வந்த பொருள் தரும்போது, வெடுக்குனு புடுங்கற அவள் வேதனை ஒரு மொழிங்க.
சிறிதாய் தவறு செய்யப்போய், பெரிதாய் விரியும் இமைக்கு நடுவே சம்மணமிட்டு எரிக்கும் மனைவியின் இரு சூரியன்கள் ஒரு மொழிங்க.
பிழைப்புக்காக உறவுகளைப் பிரிந்து வாழும் என் போல் பலர், அட்டகாசமான நகைச்சுவைக்கும் அடக்கமாய் 'முடிக்கும் அடைப்புக்குறி' ':)' முகத்தில் காட்டி விலகும் உணர்ச்சி ஓர் மொழிங்க.

இப்படி பல மொழியிருக்க... புதுசாய் நம்ம கோடம்பாக்கத்துல ஒரு 'மொழி' புறப்பட தயாராயிருக்குதுங்க.
திருமதி.சூர்யாவின் கடைசி படமாமே?
ஒரு வாரத்துக்கு முன் தான் ஒலிநாடா வெளியிட்டிருந்தாங்கனு, ராகா.காம்-ல

ஒலிய ஓடவிட்டு
ஒளிய மெலிதாக்கி
ஒய்யாரமா என்னை கட்டிலில் பார்க் செய்துட்டு
காது கொடுத்தேனுங்க...
காற்றின் மொழி - ஒலியா? இசையா?
பூவின் மொழி - நிறமா? மனமா?
கடலின் மொழி - அலையா? நுரையா?
காதல்....ல் மொழி - விழியா? இதழா?

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில், மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில், மனிதருக்கு மொழியே தேவையில்லை

காற்றின் மொழி - ஒலியா? இசையா?
பூவின் மொழி - நிறமா? மனமா?

காற்று வீசும்போது திசைகள் கிடையாது
காதல் பேசும்போது மொழிகள் கிடையாது
பேசும் வார்த்தைப் போல மெளனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அரியாது
உலவித்திரியும் காற்றுக்கு, உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம், சப்தக்கூட்டில் அடங்காது

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில், மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில், மனிதருக்கு மொழியே தேவையில்லை

காற்றின் மொழி...

வானம் பேசும் பேச்சு, துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு, நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால், கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால், நாணம் மொழியாகும்
ஓசை தூங்கும் ஜாமத்தில், உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில், அசைவுகூட மொழியாகும்

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில், மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில், மனிதருக்கு மொழியே தேவையில்லை

காற்றின் மொழி - ஒலியா? இசையா?
பூவின் மொழி - நிறமா? மனமா?
கடலின் மொழி - அலையா? நுரையா?
காதல்....ல் மொழி - விழியா? இதழா?

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில், மனிதரின் மொழிகள் தேவையில்லைஇதயத்தின் மொழிகள் புரிந்துவிடில், மனிதருக்கு மொழியே தேவையில்லை

காற்றின் மொழி...



வைராக்கியமாய் நல்ல பாடல்கள் கொடுக்க முற்படுகிற கவிப்பேரரசு வைரமுத்து...

வார்த்தையின் வனப்பு குறையாமல், வாத்தியங்கள் விரட்டும் வித்யாசாகர்...
சிறந்த படைப்புகளுக்கு சிரம் தாழ்த்தி, பிறப்பு கொடுக்கும் பிரகாஷ்ராஜ்...

வலியை வழியப்போய் கதையாய் தேடும் ராதாமோகன்...

இந்தப் பாடலுக்கு குரல் வார்த்துள்ள பலராம், சுஜாதா...


உங்கள் எல்லோருக்கும், தூரதேச தமிழ் மக்களின் நன்றி மொழி - இந்த இடுகைங்க...


இன்பத்தேன் வந்து பாயுதுக் காதுக்குள்ளே!!!
என்னமோங்க
எட்டிப்பார்த்துட்டீங்க - உங்க
எண்ணத்த (Comments-அப்பு....)
எழுதிவெச்சுட்டு - போங்க!!!
நன்றி!
வட்ட்ட்ட்டா (ங்க)....

Tuesday, January 30, 2007

ஆசான்

குரு மணிரத்னம் எடுத்துட்டாருங்க?
வாத்தியார் அர்ஜுன் எடுத்துட்டாருங்க?

தமிழ்-ல பேரு வெச்சாத்தான் வரிவிலக்காமே? அதுனால 'டீச்சர்'னு வைக்க முடியாதுங்க!!! அதுவுமில்லாம 'டீச்சர்'னு வெச்சா ஒரு மாதி........ரியா...

இப்பத்தான் வயாகரா வாத்தியார்கள் பற்றி - நாளொரு மேனியா, பொழுதொரு வண்ணம்மா - செய்தி வந்துட்டிருக்குங்க... செரி... அப்படிப்பட்ட ஆஆ.......சான்களை எல்லாரும் திட்டிக்கிட்டு இருக்கிற நேரத்துல, அந்த மாதிரி சில வயாகரா வாத்தியார்களுக்கு இது சமர்ப்பணம்.

நம்ம ஊர்-ல ஒரு வாத்தியார் காலை-லிருந்து கஷ்டப்பட்டதும், கஷ்டம் கொடுத்ததும், உங்க கஷ்டத்துக்கு, இங்க...

கரெக்டா, 8:00 மணிக்கு அலாரம் அடிச்சதுங்க, நம்ம வாத்தியார் பாதி தூக்கத்துல 'செரி மணி அடிச்சாச்சு, எல்லாரும் வீட்டுக்கு கிளம்புங்க' னுட்டாரு. உடனே அவர் சம்சாரம், மொதல்ல நீ எந்திரிச்சு வேலைக்கு கிளம்புனு சவுண்ட் விட...
ஆளு அவசர அவசரம்மா குளிச்சு, சாப்பிட உட்கார்ந்தார்.

சம்சாரம், இட்லி கொண்டுவந்து வைக்க, ஒரு வாய் வெச்ச நம்மாளு, என்னடி அரவேக்காடா இருக்குனு சவுண்ட் விட, சம்சாரம் - உங்க மாதிரி அரவேக்காட நான் இத்தனை நாளா சகிச்சுக்கல... நீங்க இந்த இட்லிய ஒரு நாள் சகிச்சுக்க மாட்டீங்களோனு, டோஸ் விட, பொட்டி பாம்பா மாறின நம்மாளு பஸ்க்கு ஓடினார்.

டோஸ் வாங்கின எரிச்சலோட, நம்மாளு பஸ்க்குள்ளே ஏற முற்ப்பட...

படிக்கட்டுல நின்னுக்கிட்டிருந்த கண்டக்டர் - வாத்தியாரே, எங்க போகணும். இவ்வளவு அவசரமா?

ம்ம்... பஸ்க்குள்ளே தான் - நம்மாளு

கடுப்பான கண்டக்டர், சரி, கேள்விய மாத்தி போடலாமுனு..,
சரி எந்த இடத்துக்கு போறீங்க???

ம்ம்ம்... எங்க உட்கார இடமிருக்கோ அங்க தானு, நம்மாளு மறுபடியும் கடுப்பேத்த...

இவன விடக்கூடாதுனு கண்டக்டர் மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டு,
சரி, எங்க இறங்குவ? (மரியாதைய கொஞ்சம் மட்டுப்படுத்தி)

ம்ம்ம்... படிக்கட்டு வழியாத்தான்...

இவன் கிட்டலாம் படிச்சு, உருப்பட்டு... முனகி கொண்டே, டிக்கெட் வாங்குனு கண்டக்டர்.

நம்மாளு நமட்டு சிரிப்பு சிரிச்சுக்கிட்டே... 50 ரூபாய் நோட்டு நீட்டினார், மீண்டும் கடுப்பேத்த...

ஆனா கண்டக்டர், அமைதியா டிக்கெட்டுக்கு பின்னாடி, 46.50ன்னு எழுதி கொடுத்துட்டு, பேலன்ஸ் அப்புறம் வாங்கிக்கோங்க ஸார்-னு சொல்ல, நம்மாளுக்கு பெருமிதம் தாங்கல.

நம்மாளு பஸ் நிறுத்தம் நெருங்க., தூரம்மா நின்னுக்கிட்டிருந்த கண்டக்டர பார்த்து, கண்டக்டர் பேலன்ஸ் கிடைக்கலனு கத்த...

ம்ம்ம்... கால அகிட்டு வெச்சு கம்பிய புடி, நல்லா பேலன்ஸ் கிடைக்கும்னு, கண்டக்டர், திருப்பி கொடுத்த ஆப்பு பஸ்ஸே குலுங்கிடுச்சுங்க...

எப்படியோ ஒரு வழியா காலேஜ்க்குள்ள நம்மாளு நுழைகிறார்.

எதிர்படும் ஒரு ஸ்டுடண்ட்ட பார்த்து, ஒரு வாத்தியார் வரார், குட்மார்னிங் சொல்ல தோணுல உனக்குனு, வெயிட் காட்ட.

ஸ்டுடண்ட் - உங்களுக்கு என்னம்மோ எங்கனால குட்மார்னிங்கா தான் ஸார் இருக்கு, ஆனா எங்களுக்கு உங்கனால பேட்-மார்னிங்கா இருக்கு ஸார்னு சொல்லிட்டு கண்டுக்காம போக!

மறுபடியும் கடுப்பாகி...

Class Roomக்குள்ள, நம்மாளு.

ஸ்டுடண்ட்: ஆமா ஸார், Physics வாழ்க்கை-ல எதுக்கு ஸார், உதவுது, அதைப்போய் படிச்சுக்கிட்டு இருக்கோம்.
நம்மாளு: (கடுப்புடன்) ம்... உயிரெடுக்காம இருக்க...
ஸ்டுடண்ட்: அதெப்படி ஸார்?
நம்மாளு: (நக்கலாக) உன்னை மாதிரி ஆளுக பெயிலாகி, மெடிக்கல் காலேஜ் போக விடாம தடுத்து...
ஸ்டுடண்ட்: உங்க வாத்தியார் தப்பு பண்ணிட்டார் ஸார்...

கடுப்பான நம்மாளு! எங்க உன் நோட்ட கொடு...

வாங்கி பார்த்த நம்மாளு Physicsக்கு Spelling தப்பா இருக்கறத பார்த்து கோபத்துடன், ஏன்டா, இவ்வளவு பேசற, Physicsக்கு Spelling தப்பா எழுதியிருக்க?

ஸ்டுடண்ட்: ஸார்! நியுமராலஜி-ப்படி மாத்திட்டேன்.
(இப்ப whole class-ஏ சிரிக்க)

மனசளவுல மருகின நம்ம வாத்தியார், இன்று எவன்கூட பேசினாலும் ஆப்பு அடிச்சிட்டு போயிடறாங்க. அதனால கம்முனு வீடு போய் சேருவோம்னு, வீட்டுக்கு கிளம்பினார்.

அப்ப தான் அவர் சம்சாரம் வரும்போது உருளைக் கிழங்கு வாங்கிட்டு வாங்கனு சொன்னது ஞாபகம் வர... மார்க்கெட்க்குள்ளெ...

வாத்தியார்: ஆமா!!! இந்த உருளைக் கிழங்கு கிலோ, எம்புட்டு?
கடைக்காரர்: வாத்தியாரே!!! போங்க, போய் உங்க சம்சாரத்த வரச் சொல்லுங்க.
வாத்தியார்: (கடுப்புடன்) ஏன்? ஆம்பிளைகளுக்கு வியாபாரம் செய்யமாட்டீங்களோ?
கடைக்காரர்: அதில்ல, வாத்தியாரே!!! சப்போட்டா பழத்த காட்டி, உருளைக் கிழங்கு கிலோ, எம்புட்டுனு கேட்டா, அப்புறம் என்னத்த சொல்ல-னு., சொல்லவும்...
நம்ம வாத்தியார், நொந்துட்டாருங்க...

எப்படியோ வீடு வந்து சேர்ந்தார்...

வீட்டுக்குள்ள போனதும், நம்ம வாத்தியார் சம்சாரம் பரப்பரத்தாங்க... ஏங்க நம்ம பையன் வளர்த்தீட்டிருந்த மைனா செத்துப்போச்சுங்க, பக்குவம்மா எடுத்து சொல்லுங்கனு...
இல்லடி... காலையிலிருந்து எனக்கு நேரம் சரியில்ல... நீயே சொல்லுடி - நம்மாளு
உங்கனால எதுக்கும் கையாலாகுதுனு திட்டிக்கிட்டிருக்கும் போதே, பையனும் வந்தான்.
நம்ம வாத்தியார் சம்சாரமும் பக்குவம்மா ஏதோ சொல்ல, பரவாயில்லம்மானு பையனும் விளையாடப் போயிட்டான்.
அதாண்டி நான் உன்னை சொல்லச் சொன்னேனு, வழிஞ்ச நம்ம வாத்தியார, ஒரு முறை முறைச்சாங்க அவரு சம்சாரம்.

கொஞ்ச நேரம் கழிச்சு வந்த, பையன்...
பையன்: அம்மா, மைனா எங்க காணோம்?
அம்மா: அதாண்டா, செத்து போச்சில்ல?
(பையன் பயங்கரம்மா அழுக ஆரம்பிச்சுட்டான்... )
இதப் பார்த்த நம்ம வாத்தியார், ஏண்டா! அப்பவே அம்மா சொன்னாங்க இல்ல... இப்ப வந்து அழுவற...
இல்லப்பா!!! அம்மா, அப்ப நயினா செத்துப்போச்சுனு தான் சொன்னாங்க. அதான் நான் கம்முனுப்போய்ட்டேனு சொன்னான் பாருங்க...

நம்ம வாத்தியார் வாழ்க்கையே வெறுத்துட்டார்.

என்னமோங்க
எட்டிப்பார்த்துட்டீங்க - உங்க
எண்ணத்த (Comments-அப்பு....)
எழுதிவெச்சுட்டு - போங்க!!!

நன்றி!

வட்ட்ட்ட்டா (ங்க)....

Wednesday, January 24, 2007

ஆ... வி(அவ)மான நிலையம்!!?

நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன்.

என்னடா ஆளையே காணோமுனு சந்தோஷப்பட்டவங்க, மன்னிக்கவும்.

அது சரி... எதுக்கு இந்த இடைவெளினு தானே கேட்கறேள்.

பசலை நோய் படற ஆரம்பிச்சுதுனால, பாசவலை விரிக்க, கடல் தாண்டி என் கணவி (கணவருக்கு எதிர் பால்) கண்களில் மீன் பிடிக்க சென்றிருந்தேன்.

நான் அங்க போன நேரம், அஸ்ஸாமுல பீகாரீஸ்-அ உல்பா விரட்ட, இங்க இங்கிலாந்து-ல ஷில்பா-வ மிரட்ட, எங்க பார்த்தாலும் ஏதோ ஒரு பிரச்சனையுங்க...

அப்படி நான் பார்த்து(த்து...து), அனுபவித்து(த்து...து), அல்லல்ப்பட்ட ஒரு விஷயம் தாங்க உங்க பார்வைக்கு...

ஏழு நாள் ஏகாதேசி கடந்து போக, சந்தோஷத்துல பறந்து, ஆகாயத்துல மிதந்து, மும்பாய் உள்நாட்டு விமான நிலையத்துல தரையிறங்கினேன்.

அனக்கோண்டா பாம்பவிட நீளமா ஒரு வரி(ச்ச்..சை..)சையுங்க...

குறுக்க நுழைய துடிக்கும் குற்றங்கள் ஒரு புறம்...
அதைப் பார்த்து எரிச்சலாய் எரிந்து விழும் நியாயங்கள் ஒரு புறம்...
அம்மா பசிக்குது, முகம் வாடி, வாய் திறக்கும் வாண்டுகளின் வாட்டம் ஒரு புறம்...
பேசமுடியாத பச்சிளம் குழந்தையின் பசி கதறல் ஒரு புறம்...
வாஞ்சையுடன் நாற்காலி தேடும், வயதானவர்களின் வலி ஒரு புறம்...

என்னடா உலகமிதுனு நினைச்சுக்கிட்டே, விமானநிலைய அதிகாரியிடம் கேட்டேன். ஸார்!!! வெளிநாட்டு விமானநிலையம் போகனும்...?
...
...
இந்த வரிசையில் நில்லுங்கனு அவர் கை காட்டிய அனக்கோண்டாவ பார்த்து, கொஞ்சம் பதறிட்டேனுங்க.

சந்தோஷமும் துக்கமும் மாறி மாறி வருமுனு சொல்லுவாங்க... ஏழு நாள் சந்தோஷத்துக்கு எட்டாம் நாளே எளவெடுத்துட்டானு புலம்பிக்கிட்டே...

அரை மணிக்கு ஒரு முறையாம் - பேருந்து...
அறைய வேண்டாம், அதிகாரிகளை...

என் முறை வந்தது!!! முறைத்துக் கொண்டே அதிகாரி நோக்கி முன்னேறிய நான்...

நான்: ஸார்! நம்ம நாடு முன்னேறுமா?

அதிகாரி: எதுக்கு கேட்கறீங்க?

நான்: இல்லை!!! இங்க, ஒரு நாளைக்கு உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டு விமானநிலையம் செல்கிற பயணிகள் குறைந்தபட்சம் 20000 பேர். அதுவும் இவர்கள் மேல்தட்டு மக்கள்.
குறைந்தது ஒரு மணிக்கு ரூபாய் 500 சம்பாதிக்கும் வல்லமை படைத்தவர்கள்!!! இங்கே, இந்த மக்கள் குறைந்தது 2 மணி நேரம் ஒரு உபயோகமும் இல்லாமல், காத்திருக்கின்றனர். ஆக மொத்தம், ஒருவர்க்கு ரூபாய் 1000 வீதம், 20000 பேருக்கு ஒரு நாளைக்கு தொழில்பெருக்க நஷ்டம் 2,00,00,000 (2 கோடி)... வருடத்துக்கு 730 கோடிகள். (நானும் விஜயகாந்த் மாதிரி கணக்காவும் கச்சிதமாவும் கேள்விகளை அள்ளி வீசினேனுங்க...)

அதிகாரி: (முறைப்புடன்)...

நான்: குழந்தைகளை குதூகளிக்க வைக்க எத்தனையோ திட்டங்களைத் தீட்டும் பல நாடுகளுக்கு மத்தியில், இங்கு பணமிருந்தும் பசியாற்ற முடியாத கொடுமை... இப்ப சொல்லுங்க நம்ம நாடு முன்னேறுமா?

அதிகாரி: (முறைப்புடன்)...

நான்: இந்த மாதிரி, அக்கறையில்லாத அதிகாரிகள், அவலட்சணமான ஒரு முறை... (மேலே பார்த்து உதட்டை பிதுக்கி, கையை விரித்து... கடவுளே!!! இந்திய மக்கள் சொகுசு வாழ்க்கையில் மிதக்கலாம், இந்தியா சொகுசாகுமா???)

கணத்த இதயத்துடனும், கேட்க வேண்டியதை கேட்டுவிட்ட திருப்தியுடனும்.................

என்னமோங்க
எட்டிப்பார்த்துட்டீங்க - உங்க
எண்ணத்த (Comments-அப்பு....)
எழுதிவெச்சுட்டு - போங்க!!!

நன்றி!

வட்ட்ட்ட்டா (ங்க)....

Wednesday, January 03, 2007

2007

என்னமோங்க???
எண்-எ எனக்கு தலைப்பாகுதுங்க...

இப்படித்தான் கடந்த வருடம் எனக்கு என் ஸ்நேகம் ஒன்று அருளிய நாளேட்டில் நான் நகைச்சுவை-யாய், நாசுக்காய், நய்யாண்டி செய்த கீழ் வரும் வரிகள்...

என் நாளேட்டின் முதல் பக்கத்தில்...

எழுதலாமா வேண்டாமா
ஏன் இந்த குழப்பம்
எழுத்தால் எழும் பிரச்ச்னைகளை
என்னை விட்டு
உறிக்க நான்
ஊசலாடப்போவது உறுதி???

மை எழுதுவதல்ல
மெய் எழுதுவது இது!!!

புரட்டாதீர்?
புரட்டப்படுவீர்...

புறப்படுவது என் ஏழாம் பிம்பம்...

தயவுசெய்து இங்கேயேதடுத்துவிடுங்கள்...
என் வீட்டு ஜன்னலை
எட்டிப்பார்ப்பதை...

உண்மைகள் உள்ளேயிருக்க
ஊடுருவி உரசினால்
உங்கள் உள்ளங்களில் கூட
உளி விழும்...

இனிஉங்கள் இஷ்டம்!!!

இப்படி ஆரம்பம் என்னமோ அமர்க்களமாதாங்க இருந்தது... அதுக்கப்புறம் பார்த்தா அது மட்டும் தாங்க இருக்கு...

வாழ்க்கையில் வரவு செலவு பார்க்க பொருள் தேடி அழையும் இவ்வுலகில், பொழுதேது? பேனா மையை பீச்சியடிக்க...

நாளேட்டில் ஆக்கரமிப்பில்லை
நாளே ஆக்கரமிப்பானதால்...

இனி வரும் இவ்வருடம், அளவான ஆக்கரமிப்போடு, சொந்த வாழ்க்கைக்கு சந்து தந்து, உறவுக்கு உரமிட்டு, உல்லாசத்தை உணர்ந்து, உலகமே உன்னதமாய் வாழ உயிர்ப்பெடுப்போம்...

வருமாண்டு வசந்தம் வீச வழிபடுகிறேன்.


WISH YOU VERY HAPPY NEW YEAR

என்னமோங்க
எட்டிப்பார்த்துட்டீங்க - உங்க
எண்ணத்த (Comments-அப்பு....)
எழுதிவெச்சுட்டு - போங்க!!!
நன்றி!
வட்ட்ட்ட்டா (ங்க)....

Tuesday, December 12, 2006

57

(என்னடா 1, 2, 3, நு வந்துட்டிருந்தவன், டக்குனு 57க்கு எகிறிட்டானு தானே நினைக்கிறேள், மேட்டரை படிங்கோன்னா)

டிசம்பர் 12.

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

என்னடா, Title-ல 57-னு வெச்சுட்டு, தேதி போடறான்... திருக்குறள் சொல்லறான்... அப்படி......னு?

குழந்தைகள் தினமா?
மகளிர் தினமா?
ஆசிரியர் தினமா?
தாய்மார்க்ள் தினமா?
இளைஞர்கள் தினமா?

இல்லை-ப்பு!

எல்லாருக்கும் சேர்த்து ஒரு தினம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த தினம்.

அவரை பற்றி சொன்னா, அப்புறம் இந்த ஒரு குடில் பத்தாதுங்க?

அவரு ஸ்டைல்-ல சொல்லனும்னா ---

அவரை பிடிச்சிருக்குனு சொல்லாதவன்
அவரை பிடிக்கலைனு சொல்லமாட்டான்!

கலைந்த தலைமுடி!!!
முன் தலைமுடி குறைவு!!!
சின்ன கண்கள்!!!
அடர்த்தி குறைந்த மீசை!!!
மூக்கின் மேல் தளும்பு!!!
வெடித்த உதடு!!!


இவை அனைத்தும் தனித்தனியா எப்படியோ இருக்கலாமுங்கப்பு.

ஆனா!
அது
அனைத்தும்
அவரோடு
அணைத்து
அழகு.

உங்களை போலத்தான் நானும் எதிர்ப்பார்த்திட்டிருக்கேனுங்க!!!
எதுக்கு?

எனக்கும் தெரியும்ங்க... உங்களுக்கும் தெரியும்ங்க... ;) அப்புறம் எதுக்கு?

என்னமோங்க
எட்டிப்பார்த்துட்டீங்க - உங்க
எண்ணத்த (Comments-அப்பு....)
எழுதிவெச்சுட்டு - போங்க!!!

நன்றி!

வட்ட்ட்ட்டா (ங்க)....