Wednesday, January 24, 2007

ஆ... வி(அவ)மான நிலையம்!!?

நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன்.

என்னடா ஆளையே காணோமுனு சந்தோஷப்பட்டவங்க, மன்னிக்கவும்.

அது சரி... எதுக்கு இந்த இடைவெளினு தானே கேட்கறேள்.

பசலை நோய் படற ஆரம்பிச்சுதுனால, பாசவலை விரிக்க, கடல் தாண்டி என் கணவி (கணவருக்கு எதிர் பால்) கண்களில் மீன் பிடிக்க சென்றிருந்தேன்.

நான் அங்க போன நேரம், அஸ்ஸாமுல பீகாரீஸ்-அ உல்பா விரட்ட, இங்க இங்கிலாந்து-ல ஷில்பா-வ மிரட்ட, எங்க பார்த்தாலும் ஏதோ ஒரு பிரச்சனையுங்க...

அப்படி நான் பார்த்து(த்து...து), அனுபவித்து(த்து...து), அல்லல்ப்பட்ட ஒரு விஷயம் தாங்க உங்க பார்வைக்கு...

ஏழு நாள் ஏகாதேசி கடந்து போக, சந்தோஷத்துல பறந்து, ஆகாயத்துல மிதந்து, மும்பாய் உள்நாட்டு விமான நிலையத்துல தரையிறங்கினேன்.

அனக்கோண்டா பாம்பவிட நீளமா ஒரு வரி(ச்ச்..சை..)சையுங்க...

குறுக்க நுழைய துடிக்கும் குற்றங்கள் ஒரு புறம்...
அதைப் பார்த்து எரிச்சலாய் எரிந்து விழும் நியாயங்கள் ஒரு புறம்...
அம்மா பசிக்குது, முகம் வாடி, வாய் திறக்கும் வாண்டுகளின் வாட்டம் ஒரு புறம்...
பேசமுடியாத பச்சிளம் குழந்தையின் பசி கதறல் ஒரு புறம்...
வாஞ்சையுடன் நாற்காலி தேடும், வயதானவர்களின் வலி ஒரு புறம்...

என்னடா உலகமிதுனு நினைச்சுக்கிட்டே, விமானநிலைய அதிகாரியிடம் கேட்டேன். ஸார்!!! வெளிநாட்டு விமானநிலையம் போகனும்...?
...
...
இந்த வரிசையில் நில்லுங்கனு அவர் கை காட்டிய அனக்கோண்டாவ பார்த்து, கொஞ்சம் பதறிட்டேனுங்க.

சந்தோஷமும் துக்கமும் மாறி மாறி வருமுனு சொல்லுவாங்க... ஏழு நாள் சந்தோஷத்துக்கு எட்டாம் நாளே எளவெடுத்துட்டானு புலம்பிக்கிட்டே...

அரை மணிக்கு ஒரு முறையாம் - பேருந்து...
அறைய வேண்டாம், அதிகாரிகளை...

என் முறை வந்தது!!! முறைத்துக் கொண்டே அதிகாரி நோக்கி முன்னேறிய நான்...

நான்: ஸார்! நம்ம நாடு முன்னேறுமா?

அதிகாரி: எதுக்கு கேட்கறீங்க?

நான்: இல்லை!!! இங்க, ஒரு நாளைக்கு உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டு விமானநிலையம் செல்கிற பயணிகள் குறைந்தபட்சம் 20000 பேர். அதுவும் இவர்கள் மேல்தட்டு மக்கள்.
குறைந்தது ஒரு மணிக்கு ரூபாய் 500 சம்பாதிக்கும் வல்லமை படைத்தவர்கள்!!! இங்கே, இந்த மக்கள் குறைந்தது 2 மணி நேரம் ஒரு உபயோகமும் இல்லாமல், காத்திருக்கின்றனர். ஆக மொத்தம், ஒருவர்க்கு ரூபாய் 1000 வீதம், 20000 பேருக்கு ஒரு நாளைக்கு தொழில்பெருக்க நஷ்டம் 2,00,00,000 (2 கோடி)... வருடத்துக்கு 730 கோடிகள். (நானும் விஜயகாந்த் மாதிரி கணக்காவும் கச்சிதமாவும் கேள்விகளை அள்ளி வீசினேனுங்க...)

அதிகாரி: (முறைப்புடன்)...

நான்: குழந்தைகளை குதூகளிக்க வைக்க எத்தனையோ திட்டங்களைத் தீட்டும் பல நாடுகளுக்கு மத்தியில், இங்கு பணமிருந்தும் பசியாற்ற முடியாத கொடுமை... இப்ப சொல்லுங்க நம்ம நாடு முன்னேறுமா?

அதிகாரி: (முறைப்புடன்)...

நான்: இந்த மாதிரி, அக்கறையில்லாத அதிகாரிகள், அவலட்சணமான ஒரு முறை... (மேலே பார்த்து உதட்டை பிதுக்கி, கையை விரித்து... கடவுளே!!! இந்திய மக்கள் சொகுசு வாழ்க்கையில் மிதக்கலாம், இந்தியா சொகுசாகுமா???)

கணத்த இதயத்துடனும், கேட்க வேண்டியதை கேட்டுவிட்ட திருப்தியுடனும்.................

என்னமோங்க
எட்டிப்பார்த்துட்டீங்க - உங்க
எண்ணத்த (Comments-அப்பு....)
எழுதிவெச்சுட்டு - போங்க!!!

நன்றி!

வட்ட்ட்ட்டா (ங்க)....

2 Comments:

Anonymous Anonymous said...

Excellent Maappu!!!

9:44 PM  
Anonymous Anonymous said...

ஆஆஆஆஆ....அந்த கொடுமைய ஏன் கேக்குரிங்க. நான் அந்த பேருந்துனால என்னோட விமானத்தை த்வற விட்டுட்டேங்க. கொடுமை என்னனா...எப்ப அந்த பேருந்து வரும்னு யாருக்குமே தெரியலே. கேட்டா, இன்னும் 5 நிமிசத்துல வரும் சார்-னு ஒரு பதில். அது ஒரு 45 நிமிசம் கழிச்சு வந்துச்சு. அது சரின்னு அதுல உள்நாட்டு விமான நிலையம் போய் சேர்ந்தா, அங்க காசு வசூல் செய்து நம்ம பொட்டிய எல்லாம் கொடுக்கிறாங்க, அதுக்கு ஒரு 10/15 நிமிசம்......ஆ ....இந்த கூத்துனால எனக்கு 150$ சுவாஹா.....

9:50 PM  

Post a Comment

<< Home