Tuesday, December 12, 2006

57

(என்னடா 1, 2, 3, நு வந்துட்டிருந்தவன், டக்குனு 57க்கு எகிறிட்டானு தானே நினைக்கிறேள், மேட்டரை படிங்கோன்னா)

டிசம்பர் 12.

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

என்னடா, Title-ல 57-னு வெச்சுட்டு, தேதி போடறான்... திருக்குறள் சொல்லறான்... அப்படி......னு?

குழந்தைகள் தினமா?
மகளிர் தினமா?
ஆசிரியர் தினமா?
தாய்மார்க்ள் தினமா?
இளைஞர்கள் தினமா?

இல்லை-ப்பு!

எல்லாருக்கும் சேர்த்து ஒரு தினம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த தினம்.

அவரை பற்றி சொன்னா, அப்புறம் இந்த ஒரு குடில் பத்தாதுங்க?

அவரு ஸ்டைல்-ல சொல்லனும்னா ---

அவரை பிடிச்சிருக்குனு சொல்லாதவன்
அவரை பிடிக்கலைனு சொல்லமாட்டான்!

கலைந்த தலைமுடி!!!
முன் தலைமுடி குறைவு!!!
சின்ன கண்கள்!!!
அடர்த்தி குறைந்த மீசை!!!
மூக்கின் மேல் தளும்பு!!!
வெடித்த உதடு!!!


இவை அனைத்தும் தனித்தனியா எப்படியோ இருக்கலாமுங்கப்பு.

ஆனா!
அது
அனைத்தும்
அவரோடு
அணைத்து
அழகு.

உங்களை போலத்தான் நானும் எதிர்ப்பார்த்திட்டிருக்கேனுங்க!!!
எதுக்கு?

எனக்கும் தெரியும்ங்க... உங்களுக்கும் தெரியும்ங்க... ;) அப்புறம் எதுக்கு?

என்னமோங்க
எட்டிப்பார்த்துட்டீங்க - உங்க
எண்ணத்த (Comments-அப்பு....)
எழுதிவெச்சுட்டு - போங்க!!!

நன்றி!

வட்ட்ட்ட்டா (ங்க)....

Sunday, December 10, 2006

அந்த ஒரு சொட்டு...


நாள் தொலைந்ததா - இல்லை
நாள் நுழைந்ததா - தெரியாத
நள்ளிரவு?

பூமத்திய ரேகைக்கு
வடக்கே வெகு தொலைவில்.,
வாழ்க்கை நலன் இதென்று நினைத்து
தாரத்தையும்...
தாயையும்...
தாய் நாட்டையும்... விட்டுதனியே
தவிக்கும்
தருணத்தில்...

இதயம் வருட
இசை தமிழ் தேட
இதோ...

அந்நியத்தா ஸரணம் நாஸ்தி துவ்மேவ ஸரணம் நம
தஸ்மா காருண்ய பாவ்வேண ரக்ஷ ரக்ஷ மகெஸ்வர

பாடு பாடு பாரத பண்பாடு (வாவ்... How Beautiful ) ம்ம்ம்
மேலை நாடும் போற்றிடும் பண்பாடு (ஓ... I Like it... I like it... )
விண்ணோடு காற்றோடு - மண்ணோடு ஒளியோடு
பண்பாடு இங்கே தான் பிறந்ததென்று கொண்டாடு - பாடு

பாடு பாடு பாரத பண்பாடு
மேலை நாடும் போற்றிடும் பண்பாடு

மொழிகள் பிறந்ததும் இங்கே தான்
கலைகள் பிறந்ததும் இங்கே தான்
காதல் பிறந்ததும் இங்கே தான்
கற்பு நிலைத்ததும் இங்கே தான்
இல்லவன் இராமன் சீதைக்காக வில்லூன்றியதுமிங்கே தான்
அக்னித் தீர்த்தம் கோடித் தீர்த்தம் அத்தனை தீர்த்தமும் இங்கே தான்
தாலி என்னும் சின்ன கயிறு வேலியாவதும் இங்கே தான்
தாரம் தவிர இன்னோர்ப் பெண்ணை தாயாய் நினைப்பதும் இங்கே தான்! தாயாய் நினைப்பதும் இங்கே தான்!

பாடு பாடு பாரத பண்பாடு
மேலை நாடும் போற்றிடும் பண்பாடு

சிற்பக் கலைகள் என்னென்ன
சித்திரக் கலைகள் என்னென்ன
நடனக் கலைகள் என்னென்ன
நாதம் கீதம் என்னென்ன
காளிதாசனும் கம்பனாடனும் கவிதை சொன்னது என்னென்ன
ராஜரிஷிகளும் ஞானமுனிகளும் வேதம் சொன்னது என்னென்ன விஞ்ஞானத்தால் முடியா இன்பம் ஞானம் தந்தது என்னென்ன
இதயம் திறந்து சொல்லடிப் பெண்ணே

இதை விட சொர்க்கம் வேறேன்ன!!! இதை விட சொர்க்கம் வேறேன்ன!!!

பாடு பாடு பாரத பண்பாடு
மேலை நாடும் போற்றிடும் பண்பாடு
விண்ணோடு காற்றோடு - மண்ணோடு ஒளியோடு
பண்பாடு இங்கே தான் பிறந்ததென்று கொண்டாடு - பாடு

பாடு பாடு பாரத பண்பாடு
மேலை நாடும் போற்றிடும் பண்பாடு

அந்நியத்தா ஸரணம் நாஸ்தி துவ்மேவ ஸரணம் நம
தஸ்மா காருண்ய பாவ்வேண ரக்ஷ ரக்ஷ மகெஸ்வர

பாடல் முடியும் போது, ஏதோ ஓர் உணர்வு-ங்க

இதயம் ஈரமாக, அதன் சாட்சியாக கண்ணோரத்தில் தெரிகிற அந்த ஒரு சொட்டு...

ஏதோ ஓர் உணர்வு-ங்க.

விவரிக்க முடியாத அந்த உணர்ச்சி ----

வித்யாசாகருக்கு இசை நன்றி!
வைர-முத்து வரிகளுக்கு தமிழ் நன்றி!
சித்ராவின் குரலுக்கு நன்றி!

என்னமோங்க
எட்டிப்பார்த்துட்டீங்க - உங்க
எண்ணத்த (Comments-அப்பு....)
எழுதிவெச்சுட்டு - போங்க!!!

நன்றி!

வட்ட்ட்ட்டா (ங்க)....

Saturday, December 09, 2006

மந்திர பேட்

அட போங்கப்பா...
ஆட போனாங்கப்பா...
அடிச்சு வாங்குவாங்கனு பார்த்தா!!!
அடி வாங்கறங்க...

ஆண்டவன் தான்-ப்பு காப்பாத்தனும்...

அப்படி யாரை காப்பாத்தறது...
அட நம்ம அடிப்பட்ட INDIA Teamஅ- தானுங்க...

சரி நம்ம பிராத்தணைக்கு அவுட்ப்புட்-டா ஆண்டவன் நம்ம Team-க்கு தரிசனம் கொடுக்க... இங்க பாருங்கப்பு நம்மாளுகளை...

சேவாக் - கடவுளே நான் நினைச்ச நேரம் 4-ம் 6-ம் போற மாதிரி ஒரு மந்திர பேட் கொடு சாமி...

சச்சின் - கடவுளே நான் Caught Behind ஆகாத மாதிரி ஒரு மந்திர பேட் கொடு சாமி...

டிராவிட் - கடவுளே நான் என்ன அடி அடிச்சாலும் என் காலைக்கூட Ball தாண்டாத ஒரு மந்திர பேட் கொடு சாமி...

மோங்கியா - கடவுளே நான் ஆட மாட்டேன்... ஆனா பேட்டே ஆடிக்கனும்... அப்படி ஒரு மந்திர பேட் கொடு சாமி...

தோனி - கடவுளே நான் கண்டப்ப்டி சுத்திக்கிட்டு இருப்பேன்... ஆனா எல்லாம் 6-அ போய் விழுகனும்... அப்படி ஒரு மந்திர பேட் கொடு சாமி...

இப்ப நம்ம கடவுளுக்கு புரிஞ்சிடுச்சுங்கப்பு...

நம்ம ஆளுக எதிர்ப்பார்ப்பு என்னனு :)

வரம் கொடுத்தார்...!!!

அதுக்கு அப்புறமும் நம்ம ஆளுக ஜெயுக்களை...
வெற்றி வெகுதூரம் வெலகிடிச்சுங்கனா!!!



ஆனா நம்ம மக்கள் எந்த Protest-ம் பண்ணலை...

நம்ம Players போட்டோவுக்கு நெருப்பும் வைக்கலை...






அப்படி என்ன மாற்ற்ம்..

கடவுள் கொடுத்த மந்திர பேட்...

இதோ....





















க்ஃஃ௯ம்....

எங்க போய் ஜெய்க்கறது???

என்னமோங்க
எட்டிப்பார்த்துட்டீங்க - உங்க
எண்ணத்த (Comments-அப்பு....)
எழுதிவெச்சுட்டு - போங்க!!!

நன்றி!

வட்ட்ட்ட்டா (ங்க)....

Wednesday, December 06, 2006

கொஞ்சம் அதிகமோ!!!

ம்ம்ம்ம்ம்...

கொஞ்சம் சிரிங்க...
கொஞ்சம் ஸார்...
கொஞ்சம் Left-ல திரும்புங்க ஸார்...
இப்படி...

அப்படியே லைட்-டா ஸ்மைல் கொடுங்க...

மேடம் கொஞ்சம் பல் தெரியுற மாதிரி சிரிங்க...

ஸ்மைல் ப்ளிஸ்...

ச்ச்சீஸ்ஸ்...

என்னடா போட்டோ புடிக்கறவனாட்டம்னு பார்க்காதீங்க...
இந்த போட்டோவ பாருங்க...

இவங்க அலம்பலுக்கு அளவே இல்லாம போச்சுதப்பா...

ம்ம்மூடியலை-ப்பு....




என்னமோங்க
எட்டிப்பார்த்துட்டீங்க - உங்க
எண்ணத்த (Comments-அப்பு....)
எழுதிவெச்சுட்டு - போங்க!!!

நன்றி!

வட்ட்ட்ட்டா (ங்க)....