Thursday, March 01, 2007

பழுது பார்த்த பசலை.. ;)

ஏதோ பொழுதுப்போன வேளையிளே, பொருள் தேட வந்த என்னை, பழுது பார்த்த பசலை, வார்த்தைகளையாய் வளி(லி)யவிட்ட கவிதை? (யாருப்பா அது? நட்பு வட்டாரத்துல, பொய்னு கத்தறது?) சும்மா ஒரு ரவுஸுக்கு... ஏதோ எழுதிட்டோம், இடுகை-யில ஏத்தனுமே, அதுக்கு ஒரு தமாசு முன்னுரை. அவ்வளவுத் தான்... வேற ஒன்னுமில்லீங்...ங்!!!

செல்லமே!!!

முகில் அழகென்றால்
முனகும் மனசு?
உன் கூந்தல் தரிசித்த - நான்
எப்படி ஏற்பேன்?

வட்ட நிலா தாங்கும் வானம் அழகென்றால்
வாடும் மனசு?
என் குங்குமம் தாங்கும் உன் நெற்றி நேசித்த - நான்
எப்படி ஏற்பேன்?

இரு சூரியன் ஒரு இடத்தில் இல்லையென்றால்
இருளாகும் மனசு?
அருகருகே அக்னியாய் உன் கண் கண்ட - நான்
எப்படி ஏற்பேன்?

மனித உறுப்பில் கூர்மை இல்லை! கூவினால்
குறுகுறுக்கும் மனசு?
உன் நாசி உறசி குருதி பார்த்த - நான்
எப்படி ஏற்பேன்?

பூவின் மேல் பனித்துளி பரவசமூட்டும் அழகென்றால்
புழுங்கும் மனசு?
உன் முகத்தின் பருவை பக்கத்தில்ப் பருகிய - நான்
எப்படி ஏற்பேன்?

இருவரிக் கதை கடினமாம் - இல்லையென்று
இருமாப்புக் கொள்ளும் மனசு?
உன் உதடுகள் காட்டிய ஊமைக் கதைகளை உடனிருந் உள்வாங்கிய - நான் எப்படி ஏற்பேன்?

இப்படி என்னை இம்சிக்கும் இன்பமே!!!
இயலாமையில் இயன்றளவு
வார்த்தையில் வழுக்கும்
வாழ்க்கையை வார்த்துள்ளேன்...






தள்ளி நிற்கும் தலைவனின் ஏக்கம்
தரணியில் யாரரிவார்?
ஆண்ணுக்கும் ஆசையுண்டு
ஆண்டவனிடம் அருகிப்பார்

வரியில்லா பட்ஜெட் மக்களுக்கு நன்று - இப்படி
வரிக்குள் வார்த்தை வழி(லி) உணர்ச்சி வாழ்க்கைக்கு நன்று.
உலகத்தின் உச்சந்தலையில் - உன் தலைவன்?
வயிற்றுப் பகுதியில் - என் வசந்தம்?

என்னை சுமந்தவள் - உன்னிடம்
என்னை தந்தாள்
என்னை சுமந்தாய்
என்னை சுமந்தவள் போல இன்று - நீ?

உனக்காக மட்டும் உருகும் உன்னவன் :)